இலங்கை - அவுஸ்திரேலியா இணைந்து பாரிய இராணுவ ஒத்திகை!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

அவுஸ்திரேலியா, இலங்கையுடன் முதல் தடவையாக பாரிய இராணுவ ஒத்திகையில் ஈடுபடவுள்ளது. மார்ச் 23 முதல் 29வரை இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளது.

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் முப்படையினர் பங்கேற்கவுள்ளனர்.

இதன் நிமித்தம் அவுஸ்திரேலியாவின் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளன. பின்னர் அவை திருகோணமலை துறைமுகத்துக்கு செல்லவுள்ளன.

இதேவேளை அவுஸ்திரேலிய விமானப்படையினர் மத்தளைக்கு செல்லவுள்ளனர். இரண்டு நாடுகளும் பரஸ்பர இராணுவ ஒத்துழைப்பு என்ற அடிப்படையிலேயே இந்த ஒத்திகையை நடத்தவுள்ளன.