வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள்

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா - நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்கு சென்ற இருவர் வெடிக்காத நிலையிலிருந்த மோட்டார் குண்டுகள் இரண்டை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் நெடுங்கேணி பொலிஸாருக்கு அவர்கள் உடனடியாக தகவல் வழங்கிய நிலையில், குண்டுகளை செயலிழக்க செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெடுங்கேணி ஐயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன.

மேலும் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers