பாதாள உலகக்குழுக்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்! சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள எம்.பி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

பாதாள உலகக்குழுக்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அடுத்து, பாதாள உலகக்குழுக்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு வழங்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.

மாகந்துரே மதுஷ் துபாயில் கைது செய்யப்பட்ட போது அவருடன் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானுடன் முஜிபுர் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.

கஞ்சிபான இம்ரானின் சகாவான ரிஸ்கான் என்ற வர்த்தகருக்கு சொந்தமான வாடகை வாகன சேவை நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஜிபுர் ரஹ்மான் சென்றிருந்த புகைப்படம் வெளியானதை அடுத்தே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கஞ்சிபான இம்ரானின் கட்டடம் எனக் கூறி விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி கட்டடம் தனக்கு சொந்தமானது, திட்டமிட்ட குழுவொன்று சமூக வலைத்தளம் ஊடாக சேறுபூசி வருவதால், ஏனைய பாதாள உலகக்குழுக்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தான் இந்த கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியதாக முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

Latest Offers