விறகு எடுக்கச் சென்ற நபரை துரத்தி துரத்தி தாக்கிய காட்டு யானை

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை - கந்தளாய், ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் வான்எல பகுதியை சேர்ந்த ஹேரத் நிஸாந்த என்ற 39 வயதுடைய நபரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

விறகு எடுப்பதற்காக காட்டுக்குள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்கள் விறகுகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒளிந்திருந்த காட்டு யானையொன்று இருவரையும் துரத்தி துரத்தி தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு பாதிக்கப்பட்டவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் கடந்த வாரமும் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருவதுடன், இந்த நிலையில் ஜயந்திபுர பொலிஸார் காட்டுக்குள் விறகு எடுக்க செல்ல வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.