வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு பேரிடி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையர்களை கைது செய்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளுக்கு தப்பிச் சென்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிடியாணை பெற்றுக் கொண்ட போதிலும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றவாளிகளை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் ஆதரவு உரிய முறையில் கிடைக்காமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளை மேற்கொண்டு வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மாற்றி கொண்டு பல்வேறு நாடுகளுக்கு பயணித்து கொண்டிருப்பதாகவும், அதற்காக பல்வேறு நாடுகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் ஆதாரவு அவர்களுக்ககு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இலங்கையில் செயற்படும் சட்டவிரோத கும்பல்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவர்களை கைது செய்வதற்கான முழு முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Latest Offers