விசாரணைகளின் பின் பாடகர் நதிமால் பெரேரா விடுவிப்பு

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாடகர் நதிமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அத்தியட்சகர் கோதாகொட ஆராச்சிகே லலித் குமார என்பவர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

துபாயில் மாகந்துரே மதுஷ் வழங்கிய விருந்துபசாரம் ஒன்றில் மதுஷ் உட்பட 31 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுடன் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமால் பெரேராவும் கைது செய்யப்பட்டனர்.

துபாயில் நடந்த விசாரணைகளின் பின்னர் நதிமால் பெரேராவும் கோதாகொட ஆராச்சிகே லலித் குமாரவும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.