விசா கொடுக்காமல் மறுத்தது சுவிட்சர்லாந்து அரசாங்கம்!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் விசாவினை வழங்க மறுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே இக்கருத்தினை அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அக்கட்சியின் சார்பில் பேசிய டலஸ் அழகப் பெரும மற்றும் றோகித அபேகுணவர்த்தன,

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் பக்க அமர்வு ஒன்றில் பங்கேற்க, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிவில் அமைப்பு ஒன்று கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம், அவருக்கு விசாவினை வழங்க மறுத்து விட்டது.

பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகாவுக்கு அமெரிக்கா விசா மறுத்ததன் அடிப்படையில் கேணல் ரத்னபிரிய பந்துவுக்கும் விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வன்னியில் சிவில் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் ரத்னபிரிய பந்து, கடந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இராணுவத்தில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.