அலரிமாளிகையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தரொருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் அலரிமாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ துப்பாக்கியால் 31 வயதான குறித்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
அலரி மாளிகையிலுள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.