முன்னாள் போராளியால் கசிந்த இரகசியம்! புலிகளின் தங்க நகைகளை தேடிய இராணுவத்தினர் - இறுதியில்...

Report Print Sujitha Sri in பாதுகாப்பு
1688Shares

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பெருந்தொகையான தங்க நகைகளை தேடும் பணி நேற்று முன் தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இறுதியில் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

முல்லைத்தீவு, கூட்டுறவு திணைக்களத்திற்கு உரிய இடத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுடன் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் ஈழம் வங்கி குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது வங்கியில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு பணியானது சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படாத நிலையில் தேடுதல் நடவடிக்கை முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.