கொழும்பில் படையெடுத்த வைத்தியர்களை தெறிக்கவிட்ட பெண் பொலிஸார்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு
1269Shares

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்த பெண் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் அரச பொறியியலாளர்களுமே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சென்ற ஆர்ப்பாட்டகார்களுக்கு வீதி தடைகளை ஏற்படுத்திய பெண் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.இதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமொன்றை அடக்குவதற்காக இதற்கு முன்னரும் பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் இன்றையதினம் பெண் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காகவும், எல்லை மீறிய ஆரப்பாட்டங்களை அடக்குவதற்காகவும் கலகமடக்கும் பொலிஸார் பயன்படுத்தப்பட்டனர்.

எனினும் தற்போது பெண் பொலிஸாரை வைத்து காய் நகர்த்தும் புதிய யுத்தியொன்று கையாளப்பட்டு வருகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகுகின்ற போதும் இது குறித்து யாரும் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காமை குறிப்பிடத்தக்கது.