இலங்கையின் இராணுவம் எதிர்வரும் ஜூலை மாதத்தில் பாரிய இராணுவ பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் செய்தி குறிப்பில் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற நிலையில் 10 ஆவது வருட நிறைவை முன்னிட்டே இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதில் சுமார் 5000 படையினர் பங்கேற்கவுள்ளனர். ஒரு மாத காலம் தொடரவுள்ள இந்த பயிற்சி ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
“பயிற்சி - மேற்கத்தைய கேடயம்” என்ற தலைப்பில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மன்னார் முதல் புத்தளம் வரையிலும், கல்பிட்டி, வில்பத்து தேசிய பூங்கா, மாவில்லு, தப்போவ வனப்பகுதி ஆகிய இடங்களில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையின் இராணுவ வரலாற்றில் இது பாரிய பயிற்சியாக இருக்கும் என்று இராணுவம் அறிவித்துள்ளது.