பலகாரப் பொதிக்குள் கஞ்சா - கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்த முனைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவு பொருட்களுடன் சூட்சுமான முறையில் கஞ்சா போதைப்பொருளை மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொண்டு செல்ல முற்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஆறு இலட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.