ஜப்பானின் அஸாகிரி கொழும்பில்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

ஜப்பானின் கரையோர பாதுகாப்பு கப்பலான “அஸாகிரி” இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நல்லெண்ண விஜயமாக வந்துள்ள இந்தக்கப்பலை, இலங்கையின் கடற்படையினர் வரவேற்றனர். ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

137 மீற்றர் நீளத்தைக்கொண்ட இந்தக்கப்பல், 150 அதிகாரிகளையும் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

இலங்கையில் தரித்திருக்கும் 3 நாட்களில் “அஸாகிரி” கப்பலில் வந்துள்ள அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.