இலங்கையின் பாதுகாப்பில் இந்தியாவின் அக்கறை! டோனியர் விமானத்தை வழங்க முடிவு

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

இந்திய கடற்படையின் பயன்பாட்டில் உள்ள டோனியர் விமானத்தை இலங்கை கடற்படைக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் ராஜேந்திர சிங், இலங்கை கடலோர காவல் படைத் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோரப் பாதுகாப்பு, சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாக டோனியர் விமானத்தை இலங்கைக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

பிராந்திய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடற்பரப்பிற்குள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா தன்னுடைய உறவை பலப்படுத்த இலங்கைக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers