கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விடயங்களை ஆராய பிரதி அமைச்சர் களவிஜயம்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

கொழும்பு துறைமுக நகர (Port city) திட்டத்தினை பார்வையிடுவதற்காக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயத்தினை இன்று (10) மேற்கொண்ட பிரதி அமைச்சர் சீன நாட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான விளக்கங்களை அறிந்து கொண்டார். இத்திட்டம் தொடர்பான விடயங்களை சீனத் துறைமுக திட்டத்துக்கு பொறுப்பான சீனப் பிரஜை விளக்கங்களை வழங்கினார்.

இது தவிர கொழும்புத் துறைமுக அதிகார சபையின் பல்வேறு பிரிவுகளையும் பிரதி அமைச்சர் பார்வையிட்டு பல்வேறு முக்கிய விடயங்களை தெரிந்து கொண்டார்.

Latest Offers