கொழும்பு வரும் மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழும்பு நகரம் செல்லும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பிற்கு சென்ற பல வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு போக்குவரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுள்ளார்.

இவ்வாறான கும்பலிடம் சிக்கமால் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பபிட்டுள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பணப்பைகள், நகைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேடமாக பின்பக்க பொக்கெட்டில் பணத்தினை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Offers