முக்கிய புள்ளியை இலக்கு வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் புலனாய்வு பிரிவு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பாதாள உலக தலைவர் மாகந்துரே மதுஷை எதிர்பார்த்து புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமானத்தில் நிலையத்தில் காத்திருப்பதாக பிரிவின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷ சில தினங்களில் நாடு கடத்தப்படவுள்ளார்.

அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதானி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என மதுஷ் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னர் அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Offers