வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்றுவதா? இராணுவப் பேச்சாளர் பதில்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

வடக்கு மாகாணத்தில் இருந்து படையினரை முழுமையாக விலக்கும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்றுமாறு அராசங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது,

வடக்கில் இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம். எனினும் படையினரை முழுமையாக விலக்கும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது என்றார்.