கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! பொலிஸார் அறிவிப்பு

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

குடிபோதையில் கலகம் விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் குடி போதையில் கலகம் விளைவிப்போர் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதன்படி, புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட கூடாது என பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும் கடந்த 11ஆம் திகதி முதல் இதுவரையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 941 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest Offers