கொழும்பில் பாரிய தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த நபர் கைது? பல ஆவணங்கள் மீட்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு ரெசிடன்ட் ஹோட்டல் திட்டம் உட்பட கொழும்பு பிரதான நிர்மாணிப்பு திட்டங்களின் பிரதிகளை வைத்திருந்தமையினால் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த டூல் மொஹமட் இம்ரான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தங்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய சோதனை மேற்கொண்ட போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ரெசிடன்ட் ஹோட்டல் நிர்மாணிப்பு திட்டம் மற்றும் கொழும்பின் பல நிர்மாணிப்பு திட்டங்களின் பிரதி மற்றும் பல போலி ஆவணங்களும் கைது செய்யப்பட்டவரிடம் காணப்பட்டுள்ளது.

அவருக்காக ஆஜராகிய சட்டத்தரணி பிணை கோரிய போதிலும் அதனை நிராகரித்த நீதிபதி தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.