கல்முனையில் காயத்துடன் தப்பிச் சென்ற தற்கொலை குண்டுதாரிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கல்முனையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது குண்டுதாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக கிழக்கு இராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விசேட சுற்றிவளைப்பின் போது தற்கொலை குண்டுதாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றது.

இதன்போது காயமடைந்த இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை - சாய்ந்தமருது பகுதி முழுமையாக இராணுவத்தினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.