கிண்ணியாவில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

திருகோணமலை, கிண்ணியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

பிரதான வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வாகனங்கள் உள்ளிட்ட பேருந்து போக்குவரத்து பயணிகளை இறக்கி பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் நடமாட்டம் உள்ளதுடன், கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிண்ணியா தள வைத்தியசாலையின் நுழைவாயிலிலும் தேசிய அடையாள அட்டை பரிசோதிக்கப்படுவதுடன், ஏனைய சோதனை நடவடிக்கைகளும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பாதுகாப்பு நலன் கருதி படையினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.