சஹ்ரான் ஹசீமினின் சாரதி கைது? விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்கள்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் முதலாவது பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த தகவலை சுட்டிக்காட்டி கொழும்பு சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமினின் சாரதி என கூறப்படும் நபர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

சஹ்ரான் ஹசீமின் சாரதி நேற்று காத்தான்குடி பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் காவலரணில் இருந்த தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரை சஹ்ரான் ஹசீமின் ஆதரவாளர்களே கொலை செய்ததாக கூறியுள்ளார்.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்திய முதல் தாக்குதல் இது என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹசீமின் சாரதியிடம் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.