மஸ்கெலியாவில் இருந்து சந்தேகத்திற்கிடமான உபகரணங்கள் மீட்பு

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

மஸ்கெலியா - நல்லதண்ணி, பிக்கிவ் தனியார் தோட்ட பகுதிக்கு சொந்தமான விடுதி ஒன்றில் இருந்து சில சந்தேகத்திற்கிடமான உபகரணங்கள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையின் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் நல்லதண்ணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நான்கு ஹோக்கிடோக்கிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.