கடவுள் சித்தமாக கிளிநொச்சி தேவாலயத்தில் எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை: சிறீதரன்

Report Print Yathu in பாதுகாப்பு

கிளிநொச்சியில் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் கடவுள் சித்தமாக எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வமத தலைவர்களுடனான விசேட கூட்டம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கவலை அடைகின்றேன். இவ்வாறான தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குற்றவாளிகளாக பார்க்க முடியாது.

அருட்தந்தையார் குறிப்பிட்டது போன்று கிளிநொச்சியில் தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவுள் சித்தமாக எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை.

அருட்தந்தை ஒருவர் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

உண்மையில் எவருக்குமே பாதுகாப்பு இல்லை. நான் என்னி

டம் உள்ள துப்பாக்கியையே நம்பி உள்ளேன்.

அது தவிர தற்போது உள்ள சூழலில் எதையும் செய்ய முடியாது. இஸ்லாமிய சகோதரர் ஒருவர் தொழுகை செய்ய முடியாதவாறு உள்ளது.

அதேபோன்று தேவாலயங்களிலும் படிப்படியாக வழிபாடுகளை நடத்துங்கள். வழமை போன்று தேவாலயங்களிற்கு வருவோரை வைத்து வழிபாடுகளை நடத்துங்கள்.

புதிதாக யாரும் வந்தால் அவர்களை சில நாட்களுக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டு வழமையாக வருவோரை வைத்து நடத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.