திருகோணமலையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு - கடற்படை அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

திருகோணமலையில் பெருமளவு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இறக்ககண்டி பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரின் வீட்டிலும் வீட்டின் நிலத்தடியிலும் பாரியளவான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய 51 வெடிபொருட்கள் மற்றும் 215 டெட்டனேட்டர்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.