கல்முனையில் நேற்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெளியிட்ட பகீர் காணொளி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது.

அவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த காணொளி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தாக்குதலில் ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.