தீவிரவாதத்தை போதிக்கும் மத்ரஸாக்களை மூடிவிடுமாறு சந்திரிக்கா கோரிக்கை!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கையில் இஸ்லாமிய மத்ரஸா பள்ளிகளை மூடிவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த பள்ளிகள் தீவிரவாதத்தை போதிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்னர் மத்ரஸா பள்ளிகள் இலங்கையில் இருந்து அகற்றப்பட்டன.

எனினும், இது தொடர்பில் நடப்பு அரசாங்கத்திடம் கூறிய போதும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்குரிய பாடசாலைகளில் படித்த பல மாணவிகள் அதில் இருந்து விலகி, மத்ரஸாக்களில் இணைந்தனர். இந்தநிலையில் ஆனந்தா, நாலந்தா மற்றும் விசாகா போன்ற கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று சந்திரிக்கா கோரியுள்ளார்.

இதேவேளை, இதன்போது கருத்துரைத்த மௌலவி பாரிஸ் பாருக், மத்ரஜா என்பது அறநெறி வகுப்புக்களாகும். இவற்றை எவரும் வந்து பார்வையிட முடியும். இந்நிலையில் தீவிரவாதக் குழுக்கள் கற்பிப்பது இஸ்லாமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.