பதவி விலக மறுக்கும் பொலிஸ்மா அதிபர்!

Report Print Murali Murali in பாதுகாப்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த பதவி விலக மறுப்பு வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தும், அதனை தடுக்க தவறியமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதனையடுத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

எனினும், பொலிஸ்மா அதிபர் இது வரையிலும், பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனினும், பாராளுமன்றின் அனுமதியுடன் அவரை பதவி நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.