வெடி பொருட்களுடன் இளைஞர் ஒருவர் புல்மோட்டையில் கைது

Report Print Abdulsalam Yaseem in பாதுகாப்பு

திருகோணமலை - புல்மோட்டை சலாமியா நகர் பகுதியில் விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் இளைஞரொருவரை இன்று (02) கைது செய்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை-இலாஹியா நகர் பகுதியைச் சேர்ந்த எப்.எம். எம். றிபாஸ் (22வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை புல்மோட்டை சலாமியா நகரை சுற்றிவளைத்த போது வெற்று காணிக்குள் டெட்டனேட்டர் 89 ஜெலட்னைட் கூறுகள் 08 சார்ஜர் பேட்டரி 2 மற்றும் மருந்து திரி நூல் 32 மீட்கப்பட்டதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் இளைஞர் ஒருவரை கைது செய்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர் எனவும் சந்தேகநபரை நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.