இனம், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைபவர்களுக்கெதராக கடும் நடவடிக்கை!

Report Print Murali Murali in பாதுகாப்பு

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்படடுள்ளது, இணங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பான புகைப்படங்களை வெளியிடுதல், உண்மைக்கு புறம்பான காணொளி காட்சிகளை வெளியிடும் நபர்கள் தொடர்பில் நாம் கூடுதலான கவனத்துடன் இருந்து வருகின்றோம்.

இவ்வாறான நபர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் கூறினார்.