தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறிய பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சாய்ந்தமருதில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்திய வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று மட்டக்களப்பு சென்றார்.

இதன்போது குறித்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய வீட்டிற்கும் சென்று பார்வையிட்டார்.

அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதன் விளையாக தற்கொலைதாரிகள் உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.