ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் எனது மகன் மகிழ்ச்சியாக உள்ளார்! இலங்கையில் பெருமை பேசிய பெற்றோர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
5279Shares

இலங்கையிலிருந்து சென்று சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் செயற்படும் நபரின் பெற்றோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்னர் இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால், ஐ.எஸ் பயங்கரவாதியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெற்றோர் பொலிஸாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது சிரியாவில் தனது மகன் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மகனை பார்ப்பதற்காக சிரியா சென்றிருந்த பெற்றோர் அங்கு ஒன்றரை வருடங்கள் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிரியாவில் தனது மகன், மருமகள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.