இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக பத்து பொலிஸ் வாகனங்களை சீனா வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஸியுவான் இந்த பொலிஸ் வாகனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸ் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த பொலிஸ் வாகனங்களை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.