தடையை மீறுபவர்களுக்கு விமானப்படையினரின் புதிய எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in பாதுகாப்பு

தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கருவிகள், விமானியில்லா விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.