கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொச்சிக்கடை அந்தோனியாார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவருடன் சேர்த்து மூன்று பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புககாவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் முதலாவது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.