பதிவாகியுள்ள மூன்றாவது சம்பவம்! வரலாற்று பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில்...

Report Print V.T.Sahadevarajah in பாதுகாப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில் உள்ள மலசலகூடத்திற்கு பின்புறமாக இருந்து நேற்று முன்தினம் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆலய பரிபாலன தலைவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆலயத்தலைவர் கூறுகையில், ஒருவாரகாலத்துள் அங்கிருந்து மீட்கப்பட்ட மூன்றாவது தொகுதி ஆயுதம் இதுவாகும்.

அடையாளம் தெரியாத நபர்கள் ஆலயத்தினுள் இவற்றை வீசி வருகிறார்கள். இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வருகின்றோம்.

இது தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில், இந்த ஆலயத்தின் வளாகத்தில் இருந்து இவ்வாறு ஆயுதம் மீட்கப்படுவதென்பது முதல் தடவையல்ல.

எனவே இதனை ஒரு சதித்திட்டமாக கருத வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் சிலையுடைப்பு சம்பவமும் இங்கு இடம்பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

1. கோவில் வளாகத்திலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு

2. சம்மாந்துறையில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலய வளாகத்தில் மீண்டும் ஆயுதங்கள் அடங்கிய பொதி