கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்! குண்டுதாரி தொடர்பான புதிய தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தியவர் தொடர்பான தகவலை குற்றப்புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் வாகனத்தில் வந்தவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்ற விபரத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள CCTV காணொளிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்தத் தகவலை கண்டறியப்பட்டுள்ளது.

கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்திலேயே தற்கொலை குண்டுதாரி தேவாலயத்திற்கு வருகை தந்துள்ளார்.

குறித்த வாகனம் அடுத்த நாள் பொலிஸாரினால் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.