தாக்குதல் நடத்த தயார் நிலையில் 50 தற்கொலை குண்டுதாரிகள்? பொதுபலசேனா எச்சரிக்கை

Report Print Murali Murali in பாதுகாப்பு

நாட்டில் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு இன்னும் 50 பேர் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அலட்சியமாக இருக்காது பாதுகாப்பு துறையினர் விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாட்டில் இன்னும் பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளை வரையறுத்து கூறமுடியாது.

சர்வதேச சக்திகளின் உதவியுடன் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நாட்டில் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு இன்னும் 50 பேர் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசாங்கமும் தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.