ரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் கருதியே இந்தப் பயிற்சிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம், உரிய தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி இரத்மலானை மற்றும் அதனையண்டிய வான் பிரதேசங்களில் இந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் கட்டுக்குருந்த உள்ளுர் வானூர்தி நிலையத்தை அண்மித்த, 35 கிலோமீற்றர் பரப்பில் மாத்திரம் வானூர்தி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.