கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மாற்றங்கள்! பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தள்ளது.

விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.

பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது புதிய பாதுகாப்பு விதிமுறைகள் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளும் பொது மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதுகாப்புக்கு முக்கயத்துவம் வழங்கும் பொழுது சில வேளைளில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சில அசௌகரியங்களுக்கு உள்ளாக கூடும். இதனை இட்டு தாம் கவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

விமான நிலைய வளவில் வாகன நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உள்வரும் மற்றும் வெளியேறும் பொழுது மாறப்பட்ட வாகன இரண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பொது மக்கள் எதிர்க்கொள்ளும் சிரமங்களை தவிரப்பதற்காக 24 மணித்தியாலங்களும் இலவச பஸ் சேவை இடம்பெறுகிறது.

தேவையான தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதற்காக விமான நிலைய அதிகாரிகள் 24 மணித்தியாலமும் செயல்பட்டு வருகின்றனர். வைத்திய பணியாளர்களுக்கும் இவ்வாறு சேவையில் ஈடுபட்டுள்ளனர் என நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.