கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை திட்டமிட்ட பிரதான சூத்திரதாரியான மில்ஹான் சவூதி அரேபியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தேசிய தெளஹீத் ஜமாத்தின் பயங்கரவாத குழுவின் ஆயுதப் பிரிவு பிரதானி எனவும், அவர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அத்துடன், மேலும் மூன்று பயங்கரவாத சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உயர் மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும், தாக்குதலின் பின்னர் சவூதிக்கு தப்பிச் சென்றவர்கள் எனவும், அவர்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல் பயிற்சி பெற்றவர்கள் என அரியப்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையிலிருந்து சவூதிக்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழுவினர், சர்வதேச பொலிஸாரின் தலையீட்டுடன் குறித்த அனைவரையும் கைது செய்துள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.