கொழும்பில் சில கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி - இன்னொருவர் படுகாயம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வேகமாக சென்ற காரை நிறுத்துமாறு கடற்படையினராக சமிக்ஞை காட்டியுள்ளனர். எனினும் உத்தரவை மீறி சென்றமையினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் 34 வயதுடைய நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரிபத்கொட பிரதேசத்தில் கடற்படையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனம் சேதமடைந்துள்தளாக ஊடகப் பேச்சார் மேலும் தெரிவித்தார்.