காத்தான்குடியில் வசமாக சிக்கிய சஹ்ரானின் சகா! பல தகவல்கள் அம்பலம்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசீமின் நெருங்கிய சகாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக அமையத்தில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திபொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து மொஹம்மட் அலியார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

60 வயதான குறித்த நபர் சஹ்ரான் ஹாஷிமுடன் நிதி கொடுக்கல், வாங்கல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த சந்தேகநபரை கைது செய்திருந்தனர். இதன் பின் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன என கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளால் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்சி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் சந்தேகநபரும் பங்கேற்றிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.