கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் யார்?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரை மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

அலவ்டீன் அஹமட் என்பவரே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அதேபோல் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு தாக்குதல் மேற்கொண்டவர் அச்சி மொஹமட் ஹஸ்துன் என்பதும் மரபணு பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் ஹஷீம் மற்றும் இப்ராஹிம் அல்ஹாம் அஹமட்டின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரான் ஹசிமின் மனைவி மற்றும் மகள் நேற்று குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மகளின் இரத்த மாதிரியை பெற்று மரபணு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதம் தாக்குதல் மேற்கொண்ட 8 பயங்கரவாதிகளின் மரபணு பரிசோதனை அறிக்கையும் எதிர்வரும் வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரச பிரதி பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மற்றும் அதற்கான பொருட்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அறிக்கையையும் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.