ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 210 புதிய அதிகாரிகள்

Report Print Satha in பாதுகாப்பு

ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 210 புதிய அதிகாரிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கான விண்ணப்பங்களும் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரயில்வே பாதுகாப்பு பிரிவில் காணப்படும் குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.