வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Report Print Thileepan Thileepan in பாதுகாப்பு

வவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்குள் உள்ள அம்மாச்சி உணவகத்தில் உள்ள மேசை ஒன்றில் வைத்தியசாலை பணிப்பாளரின் முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்திற்கு சென்ற நிலையில் அக் கடிதத்தை அவதானித்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஒருவர் அதனை பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். அக் கடிதத்தில் வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலையில் போடப்பட்டிருந்த கடிதத்தில் வவுனியா வைத்தியசாலை மற்றும் வவுனியா மதீனாநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலும் திங்கள் கிழமை குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், கடிதம் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.