இறுதி யுத்தம் தொடர்பான ஆவணப்படத் தயாரிப்பில் இராணுவத்தினர்

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

இறுதி யுத்தம் தொடர்பான ஆவணப் படம் ஒன்று இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆவணப்படம் தொடர்பான முதற்கட்ட ஒளிப்பதிவு வேலைத்திட்டங்கள் இன்று நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதன்போது 68ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் உள்ளிட்ட பெருமளவிலான படையினர் நந்திக்கடல் பகுதிக்கு சென்றிருந்தனர்.

2009 ஆண்டு இறுதி யுத்தின்போது முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகள் யுத்தத்த தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்னர் நந்திக்கடல் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒளிப்பதிவு இன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.