தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்கத் தயாரில்லை! ரணில்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரையும் நாம் பாதுகாக்க தயாரில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி, நியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய அடிப்படைவாத குழுவுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க முன்வர மாட்டோம்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்தனர். அரசியல் வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க நாம் தயாரில்லை. எதனையும் மறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை என்றார்.