பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in பாதுகாப்பு

பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற ரிதியில் பாதுகாப்புப் பிரிவு ஊடகம் மூலம் வழங்கும் தகவல்களில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு செயல்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“அமைதியான சூழலை நாட்டில் முழுமையாக உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பிரிவு திட்டமிட்டு செயல்படுவதாகவும்” அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பெரும்பாலானோர் இதுவரை பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers